உருவான புதிய சர்ச்சையில் இருந்து தப்பிய மகிந்தவின் மகன்
கொழும்பு கொம்பனித்தெருவில் உள்ள இரவு விடுதியில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு தொடர்பு இல்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த விடுதிக்கு வெளியில் வெள்ளிக்கிழமை (21) யோஷிதவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டதை அடுத்து, கொம்பனித்தெரு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிரிவி கமாராக்களில் பதிவாகியிருந்ததுடன், சம்பவத்தில் விடுதியின் ஊழியர் ஒருவர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை
அத்தோடு, மோதலுக்கு முன்னதாக வாக்குவாதம் ஏற்பட்டபோதே, யோஷிதராஜபக்ஷவும் அவரது மனைவியும் சம்பவ இடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 12 மணி நேரம் முன்
