யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில் நவம்பர் மூன்றாம் திகதிக்கு முன் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதிவாதி யோஷித ராஜபக்ச வழக்கு விசாரணைக்கு இன்று (28-09-2026) அழைக்கப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இரண்டாவது பிரதிவாதியான டெய்சி போரஸ்ட் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதையடுத்து அவர் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் அனில் சில்வா, நீதிமன்றத்தில் ஒரு மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

இதன் பின்னர் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நீதிபதி, இந்த வழக்கை நவம்பர் 3 ஆம் திகதி விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
சுமார் 57 மில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை 3 வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம், பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி யோஷிதா ராஜபக்ச மற்றும் டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்குப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |