யோஷிதவுக்கு சொந்தமான உணவகம் தீக்கிரை (Video)
SL Protest
Yoshitha Rajapaksa
Sri Lanka Violence 2022
By Vanan
யோஷித ராஜபக்சவிற்கு சொந்தமான உணவகம் போராட்டகாரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
சிங்கராஜ வனப் பகுதியில் அமைந்துள்ள யோஷித ராஜபக்சவிற்கு சொந்தமானதாகக் கூறப்படும் உணவகமே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
உணவகம் பற்றி எரியும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் தொடர்ச்சியாக தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.