இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர்...முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மிதந்த கொடூரம்
தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக அரசினுடைய காவல்துறை, காவல் படைகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மற்றும் அதிலே உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை காலம் காலமாக அதிகரித்துச் செல்கின்றது.
முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் வரவழைக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காணாமல் போன நிலையில் இன்று முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் 1996ஆம் ஆண்டு செம்மணியிலிருந்து இன்று வரை இராணுவத்தினருடன் சம்மந்தப்பட்ட கொலைகள் என்பது எமது பிரதேசம் எங்கிலும் அரங்கேறுகின்றது. இந்த விடயம் குறித்து ஆளுந்தரப்பு எவ்வாறு எதிர்வினையாற்றப்போகின்றது.
இராணுவத்தினர் அழைத்த படியாலே அங்கு சென்றிருந்தார்கள். அவ்வாறின்றி சட்டவிரோதமாக அவர்கள் அங்கு சென்றிருந்தால் அவர்களை கைது செய்து காவல்துறையினரிடம் ஒபபடைத்திருக்கலாம். ஆனால் அவர்களை தாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டினுடைய அரச சேவையில் இருப்பவர்கள் நாட்டு மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற மனநிலை இங்கு உருவாக்கப்பட வேண்டும்.
இது குறித்த மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் அதிர்வு நிகழ்ச்சியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
