மட்டக்களப்பு நீதவான் இடைநீக்கம்: ஆணைக்குழு அதிரடி முடிவு!
முன்னாள் மட்டக்களப்பு நீதவானை இடைநீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
வழக்குகள் தொடர்பான பல சாட்சிய சமர்ப்பிப்புகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஆறு நீதிபதிகளை ஒரு வார காலத்திற்குள் இடைநீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள்
மொரட்டுவ நீதவான் திலின கமகே, மகியங்கனை மேலதிக மாவட்ட நீதிபதி ரங்கனி கமகே மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நீதவான்களின் தகுதிகாண் காலம் இன்னும் முடிவடையாதவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் தலைவர் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன ஆவார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் மகிந்த சமயவர்தனவும் ஒரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார். மேலும் உயர் நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர ஓய்வு பெற்றதால் இடைவெளியாக உள்ள பதவிக்கு அரசியலமைப்பு சபையிலிருந்து யாரும் நியமிக்கப்படவில்லை.
மேலும் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன அல்விஸ் ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
