யாழ்ப்பாணத்தில் இளம்குடும்பஸ்தர் குத்திக்கொலை
Jaffna
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Sumithiran
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு
கத்திக் குத்துக்கு இலக்காகியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததுள்ளார்.
சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணை
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 10 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்