மர்மமான முறையில் உயிரிழந்துள்ள இளம் குடும்பப் பெண்!
மொரகல்ல, கலவிலவத்த பிரதேசத்தில் பெண்ணொருவர் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் விழுந்து கிடந்ததாகவும் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரின் விசாரணை
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது வீட்டின் படுக்கையறை, நடைபாதை மற்றும் வீட்டின் முன்பக்க கதவுக்கு அருகாமையில் இரத்தக் கறைகள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் உரிமையாளரும், ஒரு மகனும், மகளும் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 23 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்