அதிகாலைவேளை விருந்தில் கலந்துகொண்ட இளைஞன்,யுவதி திடீர் சுகவீனம்
வத்தேகம, பல்லேகுன்னப்பன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற வார இறுதி விருந்தின் போது சுகவீனமடைந்த ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் கண்டி(kandy)தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சுவாசப் பிரச்சினை காரணமாக இன்று (17) அதிகாலையில் குறித்த யுவதியும் இளைஞனும் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பானங்களில் விஷம்
தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் யுவதிக்கு 23 வயது என்றும், இளைஞனுக்கு 25 வயது என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வத்தேகம காவல்துறையினர் தெரிவிக்கையில், அவர்கள் உட்கொண்ட சில பானங்களில் விஷம் கலந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக ஒரு தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வத்தேகம காவல்துறையினர் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர், மேலும் அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
