மாவீரர் தினத்தில் கைதான இளைஞனுக்கு ஒரு வருடத்தின் பின்னர் கிடைத்தது பிணை
trinco
court
bail
By Jaso
மாவீரர் தினத்தில் முகநூலில் கவிதையை பதிவேற்றிய இளைஞனுக்கு ஒரு வருடத்தின் பின்னர் பிணை கிடைத்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனுக்கே திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்றையதினம் (14) குறித்த பிணை வழங்கி உத்தரவிட்டார்.
மூதூர் - சம்பூர் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் ரதிகரன் என்ற 28 வயது இளைஞனுக்கே ஓராண்டின் பின்னர் பிணை கிடைத்துள்ளது.
குறித்த இளைஞனை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்