முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்
முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தியில் தனது உறவுகளை கண்ட இளைஞன் ஒருவனின் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு - கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றுவருகின்றது.
மக்கள் கொத்துக் கொத்தாக கொலை
இறுதி யுத்தக் காலத்தில் திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் போன்றவற்றால் மக்களுக்கு உணவு, மருந்து என எதுவுமே கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகளால் 2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டனர்.
இதனை நினைவு கூறும் முகமாகவே இந்த வாரம் முழுவதும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் நடாத்தப்படுகின்றது.
இந்நிலையில், தனது உறவுகளை பறிகொடுத்த குறித்த இளைஞனின் கண்ணீர் காணிக்கை நெகிழ்ச்சி சம்பவமாக பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |