யாழில் கடன் சுமையால் உயிர் மாய்த்த இளைஞன்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Economic Crisis
Death
By Thulsi
யாழில் (Jaffna) இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (18.11.2025) பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆ.கஜிந்தன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தந்தையின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றுக் காலை அந்த வர்த்தகஸ்தாபனத்தின் களஞ்சியசாலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
கடன்சுமை காரணமாக குறித்த இளைஞன் உயிர்மாய்த்ததாக மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 14 மணி நேரம் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி