கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை: சகோதரர்கள் இருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Laksi
மகா ஓயா (Maha Oya) பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (13) பிற்பகல் மகா ஓயா - சமகிபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அதே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 23 வயதுடைய இரண்டு சகோதரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகா ஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி