தொடருந்தில் மோதுண்டு பரிதாபமாக இளைஞர் பலி
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Shalini Balachandran
கொழும்பு (Colombo) கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது தெமோதர கவரவெல பிரதேசத்தில் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
திணைக்களத்தின் பேச்சாளர்
இந்தநிலையில், தெமோதர கவரவெல பிரிவு என்ற முகவரியில் வசித்து வந்த 26 வயதுடைய ஜெபமாலா மரியஞ்சோதி பெர்ணான்டோ என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், சடலம் அதே தொடருந்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஹாலிஎல்ல நிலையத்தில் எல்ல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்