ஆலயவளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
Kilinochchi
Sri Lanka Police Investigation
Snake
Death
By Erimalai
கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் இன்று (06.01.2026) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்..
பாம்பு கடிக்கு இலக்காகன இளைஞன் தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது இளைஞன் ஏற்கனவே இறந்துள்ளமையை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு
இதனை அடுத்து இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சிறிகாந்தன் கிருசிகன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரழந்தவராவார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி