யாழில் துயரம் - கடலில் காணமல் போன பிரபல உதைபந்தாட்ட வீரர் சடலமாக மீட்பு
யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் காணாமல் போன பிரபல உதைபந்தாட்ட வீரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் சடலம் இன்றைய தினம் (30.12.2025) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது
உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிலவும் சீரற்ற காற்று
மேற்படி இளைஞன் நேற்றைய முன் தினம் (28.12.2025) பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு நீராட சென்றுள்ளார்.

இதன்போது, கடல் பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் இந்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை நேற்றும் மற்றும் நேற்று முன்தினம் முழுவதும் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இரு நாட்கள் கடந்து இன்றைய தினம் அதிகாலை குறித்த இளைஞன் சடலமாக கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை மருதங்கேணி காவல்துறையின பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |