தையிட்டி போராட்டத்தின் போது இடம்பெற்ற கைதுகள்: வலுக்கும் கண்டனம்...!
தையிட்டி போராட்டத்தின் போது வேலன் சுவாமிகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்டனத்தை வடக்கு கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்று (29) அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தனித்தனி நிகழ்வாக அல்ல வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அடக்குமுறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே அமைகின்றது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அத்தோடு, இந்நடவடிக்கை தேசிய சட்டங்களையும் மற்றும் இலங்கை அரசின் சர்வதேச சட்டப் பொறுப்புகளையும் தீவிரமாக மீறுகின்றது எனவும் வலியுருத்தப்பட்டிருந்தது.
மேலும், சம்பவத்தை சுட்டிக்காட்டி கடும் கண்டனம் வெளியிடப்பட்டிருந்ததுடன் இது போன்ற நடவடிக்கைகள் இத்துடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |