யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞனால் பரபரப்பு
யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பட்டங்கள் ஏற்றி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் என குழுக்ககள் குழுக்களாக பாரிய அளவிலான பட்டங்களை கட்டி பறக்க விட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மிகச் சிறப்பாக விதம் விதமாக விசித்திரமான பட்டங்களை கட்டி ஏற்றி தனக்கென மிக சிறந்த இடத்தை தக்க வைத்துள்ளது.
வடத்தில் தொங்கிய இளைஞன்
இன்றும்(07) வல்வெட்டித்துறை றெயின்போ (Rainbow) விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கூடி பாரிய பட்டங்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது பலர் இணைந்து பாரிய படலைப் பட்டத்தை தொடுவையாக இணைத்து பறக்க விட முற்பட்ட போது பட்டம் ஏற்றும் வடத்துடன் இளைஞன் ஒருவர் வான் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டு, வடத்தில் தொங்கிய நிலையில் பறந்தமை பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் சக நண்பர்களால் குறித்த நபர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 14 மணி நேரம் முன்