இரண்டு குழந்தைகளை விற்பனை செய்த இளம் தாய் கைது
Sri Lanka Police
Sri Lanka
Colombo Hospital
Sri Lanka Police Investigation
By Sathangani
இரண்டு குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இளம் தாய் மற்றும் அவ்விரு குழந்தைகளையும் விலைக்கு வாங்கிய இரண்டு பெண்களை இன்று (07) ராகம காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேவேளை பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரும், இரண்டு குழந்தைகளையும் வாங்கிய இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் விசாரணை
சந்தேகநபர்களில் இரட்டை குழந்தைகளில் ஒன்றை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் மற்றைய குழந்தையை விலைக்கு வாங்கிய பெண், களனி பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினரின் விசாரணைகளில் குறித்த தாய் ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்ததாகவும், கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி