எரிவாயு வெடித்து உயிரிழந்தாரா யுவதி? காவல்துறை வெளியிட்ட புதிய தகவல்
பொலனறுவை, வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் 19 வயதுடைய, திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தீக்குளித்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பொலனறுவை பொது வைத்தியசாலைக்கும், அங்கிருந்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (24) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி - இலங்கையில் தொடரும் துயரம்! எரிவாயு வெடிப்பு காரணமாக 19 வயது யுவதி பரிதாபப் பலி