இளம் பெண்ணின் சடலம் கடலில் இருந்து மீட்பு
Sri Lanka Police Investigation
Beruwala
Death
By Sumithiran
பேருவளை கடற்பரப்பில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் 25 வயதுடைய இளம் பெண்ணின் சடலத்தை மீனவர்கள் குழுவினர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்டுள்ளனர்.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பேருவளை காவல்துறையினருக்கு கடந்த புதன்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை மீட்ட மீனவர்கள்
சனிக்கிழமை (4) காலை கடலுக்குச் சென்ற மீனவர்கள் குழு, கரையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள கடலில் குறித்த பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி