மன்னார் யுவதியின் மரணம் : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த தமிழ் எம்.பி
மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜாவின் இறப்பிற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (07) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ”மரியராஜ் சிந்துஜாவின் இறப்பு அநியாயமாக கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்த பொழுது விசாரணை நடப்பதாக சொன்னார்கள்.
நீதியான விசாரணை
எங்களைப் பொறுத்தவரை இந்த விசாரணை ஆட்களை மாற்றம் செய்கின்ற விசாரணையாக இருக்க கூடாது. ஒரு நீதியான விசாரணையின் ஊடாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.
சிந்துஜா தங்கைக்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய பிரதான கோரிக்கையாகும்.
அதைவிட எங்களுடைய வைத்தியசாலைக்கு வர இருக்கின்ற 9 வைத்தியர்களினுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாவிடில் அந்த வைத்தியர்கள் எங்களுடைய வைத்தியசாலைக்கு வருவது கடினமாக இருக்கும்.'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |