கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பெருந்தொகையான 'குஷ்' ரக கஞ்சாவுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், தாய்லாந்தின் பெங்காக் நகரில் இருந்து இலங்கை வந்தடைந்த போதே அதிகாரிகளால் இடைமறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அதன்போது, அவரது பயணப்பொதிகளை சோதனையிட்ட போது, 19 தனித்தனி பொதிகளின் அடைக்கப்பட்டிருந்த 8.365 கிலோகிராம் எடையுள்ள குஷ் கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு 80 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |