யாழ்ப்பாணத்தில் வாளுடன் இளைஞர் கைது!
STF
Jaffna
Sri Lanka Police Investigation
By Jaso
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து இன்றையதினம்(09) வாளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலியகோவில் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் வாளினை கையில் வைத்திருந்தவேளை காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கையளிப்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்