அரசியல் அழுத்தம் - சுயேச்சை குழுவாக தேர்தலில் குதித்த இளைஞர் யுவதிகள் (படங்கள்)
வாகரை கோரளைப் பற்று வடக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் இயக்கம் மற்றும் நீதிக்கும் சமத்துவத்துக்குமான கனடியர் அமைப்பினரின் பங்களிப்புடன் சுயேச்சை குழுவாக இளைஞர் யுவதிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் வாகரை பிரதேசத்தில் தங்களுக்கான நீதிகள் மறுக்கப்பட்டதன் காரணமாக தாங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை உள்வாங்கி தங்களது கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறித்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
வேட்பு மனுத் தாக்கல்
அபிவிருத்தி எனும் போர்வையில் அதிகளவான காணி மற்றும் கிராமத்துக்கு பயன்படாத அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதன் காரணமாக தங்களது உரிமைகள் மறுக்கப்படுவதால் தாமாகவே களம் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகத்தில் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதுடன், நாளைய தினம் அவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சுயேச்சை குழு இலங்கையில் புத்தளம் மற்றும் வன்னி, மட்டக்களப்பு போன்ற இடங்களில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.






கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
