இரும்பு ஒட்டு வேலை செய்து கொண்டிருந்த இளைஞனுக்கு நடந்த அவலம்
மட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை (08 ) தனிமையில் இருந்து தனது வீட்டில் வெல்டிங் - இரும்பு ஒட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்ததாகவும் பின்னர் தனது சகோதரி மற்றும் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
திருமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சசிக்குமார் டினேஸ் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானின் பணிப்புக்கமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்துமாறு சட்ட வைத்தியரை பணித்திருந்தார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் இன்று செவ்வாய்கிழமை (09) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |