வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்: இருவர் படுகாயம்
வவுனியாவில் (Vavuniya) இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவமானது வவுனியா-தேக்கவத்தை பகுதியில் இன்று (24) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பி்ல் தெரியவருகையில், வவுனியா-தேக்கவத்தைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் குழுாய் கிணறு அடிக்கும் தொழில் செய்து வருகின்றார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த இளைஞர் வவுனியா நகரில் இருந்து வீடு சென்ற போது அவரை வழிமறித்த குழு ஒன்று, அவர் மீது போத்தல்கள் மற்றும் தடிகளால் தாக்குதல் நடத்தியுள்ளது.

அத்துடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞனின் தந்தை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனையடுத்து, காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குழாய் கிணறு அடித்தல் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளதுடன், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தற்போது விசாரணைளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |