யாழில் இளைஞர் மீது கத்திக்குத்து தாக்குதல்...! ஒருவர் கைது
யாழில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27-03-2026) இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குருநகர் பகுதியில் இரு இளைஞர்கள் போதையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மற்றையவர் மீது சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதையடுத்து படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்பின்பு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தாக்குதலுடன் தொடர்புடைய இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |