தொடருந்தில் மோதுண்டு பரிதாபமாக இளைஞர் பலி
Galle
Matara
Sri Lanka
By Shalini Balachandran
காலியில் (Galle) இருந்து மாத்தறை (Matara) நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, இந்த விபத்து சம்பவமானது காலி துறைமுக காவல் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட தொடருந்து வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்