தந்தையை இரும்புக்கம்பியால் அடித்து கொன்ற மகன் - இந்தியாவில் நடந்த கொடூரம்
India
By pavan
இந்தியாவின் மும்பை நகரில் தந்தையை இரும்புக் கம்பியால் மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தேரி பகுதியைச் சேர்ந்த 53 வயது முதியவர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் நேற்றைய தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை

இதனைதொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குறித்த நபரின் 24 வயது மகனே கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தனது தந்தை திட்டியதால் கோபத்தில் இருந்த குறித்த இளைஞர் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு சென்றுள்ளார். அதில் படுகாயம் அடைந்த அந்நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மகனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி