புதிதாக யூடியூப் தொடங்குபவரா நீங்கள்: வெளியாகிய மகிழ்ச்சி அறிவிப்பு..!
சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப்-இல் 1000 சந்தாதாரர்கள் (சப்ஸ்கிரைபர்கள்) மற்றும் 4000 பார்வை நேரங்கள் இருந்தால் மட்டுமே monetization என்ற பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது.
ஆனால் தற்போது 1000 சந்தாதாரர்கள் என்பதற்கு பதிலாக 500 சந்தாதாரர்கள் இருந்தாலே அவர்களுக்கு monetizationஎ ன்ற வசதி கிடைக்கும் என யூடியூப் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது யூடியூப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
500 சந்தாதாரர்கள்
1000 சப்ஸ்க்ரைபரில் இருந்து 500 சப்ஸ்கிரைபர்கள் என மாற்றப்பட்டாலும் 4000 பார்வை நேரம் என்பதில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BIG NEWS!! ? you can now unlock earlier access to YPP fan funding & more with fewer subs, Shorts views, and content watch hours ?
— YouTube Creators (@YouTubeCreators) June 13, 2023
மேலும் இந்த வசதி தற்போது அமெரிக்கா, பிரிட்டன், தாய்வான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.