சீன கப்பல் எதிரொலி..! தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
Hambantota
Tamil nadu
China Ship In Sri Lanka
Yuan Wang 5
By Kanna
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் கண்காணிப்பு கப்பல் நேற்றையதினம் நங்கூரமிட்டதை அடுத்து தமிழகம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடிஉள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகொப்டர்கள் உள்ளிட்டவை இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி