வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்படும் : பதில் காவல்துறை மா அதிபருக்கு சரத்பொன்சேகா எச்சரிக்கை
"யுக்திய நடவடிக்கையின் கீழ் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யாவிட்டால் அது இன்னொரு நாடகமாக மாறும். பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் யுக்திய நடவடிக்கையை நாடகமாக்கிக் கொண்டிருந்தால் அவர் வீதியில் செல்ல முடியாது" என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யுக்திய நடவடிக்கை நாடகமாக இருக்கக் கூடாது
யுக்திய நடவடிக்கையானது நாடகமாக இருக்கக் கூடாது மாறாக நாட்டில் உள்ள பிரதான போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்யும் நோக்கில் நடத்தப்பட வேண்டும்.
இலங்கையில் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யாமல் நூற்றுக்கணக்கான சாதாரண மக்களை கைது செய்வதில் எந்த பயனும் இல்லை.
மக்களின் இதயங்களை வெல்ல வேண்டுமானால்
மக்களின் இதயங்களை வெல்ல வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சரியான பாதையில் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"ஐக்கிய மக்கள் சக்தி மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களை கைகோர்க்க அழைப்பதை விட, யாரை ஏற்க விரும்புகிறதோ அவர்களை ஆராய வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |