யுக்திய நடவடிக்கை : கடந்த 24 மணித்தியாலங்களில் 963 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (19) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 963 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 638 சந்தேக நபர்களும் குற்றவியல் பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 325 சந்தேக நபர்களும் இதில் அடங்குவர்.
இதேவேளை குறிப்பிட்டளவு பின்வரும் போதைப்பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் மீட்பு
300 கிராம் ஹெரோயின் 172 கிராம் ஐஸ் போதைப்பொருள், 530 கிராம் கஞ்சா, 99,209 கஞ்சா செடிகள், 336 கிராம் மாவா, 314 கிராம் மதன மோதகம், 24,083 போதை மாத்திரைகள் என்பவையாகும்.
இந்நிலையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 10 சந்தேகநபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பலர்
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் காவல்துறை விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 25 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 325 சந்தேக நபர்களில் 66 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் 228 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் 11 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |