தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட யுக்திய: சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அமைப்பு குற்றச்சாட்டு
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதை யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டுமென சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அமைப்பு கோரியுள்ளது.
மேலும், சட்டத்துக்கு எதிரான தனிப்பட்ட திட்டங்களுக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படக் கூடாதென அந்த அமைப்பு சிறிலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள முக்கிய போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையை, சிறிலங்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட போது டிரான் அலஸ் முன்னெடுத்திருக்க வேண்டுமென சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அமைப்பு தெரிவித்துள்ளது.
யுக்திய சுற்றிவளைப்பு
மாறாக தேர்தல்கள் நெருங்கும் போது இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்க கூடாதென எனவும் வலியுறுத்தியுள்ளது.
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்பில் அதிகளவான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதன் மூலம் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கை தொடர்பில் டிரான் அலஸ் வெளியிடும் கருத்துக்கள், சர்வதேச சட்டங்களுக்கு எதிராகவுத் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டிரான் அலஸுக்கு கடிதம்
இந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமெ சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும், சிறிலங்காவின் அரசியலமைப்பில் நீதி என குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை அடிப்படையாக கொண்டு யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |