அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய யுபுன்! பொதுநலவாய போட்டியில் இலங்கைக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு
Sri Lanka
Commonwealth Games
By Kanna
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் பதக்கம் பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற 100 மீற்றர் தகுதிகாண் போட்டியில் 10.6 வினாடிகளில் கடந்து பதக்கம் பெறும் அரையிறுதிச் சுற்றுக்கு யுபுன் அபேகோன் தெரிவாகியுள்ளார்.
முன்னதாக, ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவிலேயே இசுரு குமார வெண்கல இலங்கைக்கு பதக்கத்தை பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், யுபுன் அபேகோன் ஊடாக இலங்கைக்கு மற்றுமொரு பதக்கமொன்று கிடைக்கலாம் என எதிர்பார்க்ககப்படுகிறது.

