மீண்டும் இலங்கை வந்தார் யுவன்
Yuvan Shankar Raja
Sri Lanka
By pavan
தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா தற்போது இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இன்று அதிகாலை (05.02.2024) அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு சிஆர்&எப்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்வதற்காகவே யுவன்சங்கர் ராஜா இலங்கையை வந்தடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மீண்டும் இலங்கை பயணம்
யுவன் லோங் டிரைவ்வினுடைய முன்னாயத்த கலந்துரையாடல்கள் இன்று மாலை கொழும்பு தாமரைக்கோபுர அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணியின் உடலை இந்தியா கொண்டு செல்வதற்காக அவரது சகோதரரான யுவன் சங்கர் ராஜா கடந்த 25 ஆம் திகதி இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தகக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்