வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெலன்ஸ்கி: விமானம் ஏறும் முன்னர் கூறியது என்ன?
கடுமையான அவமானப்படுத்தல்களுடன் அமெரிக்க வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பிரித்தானியா வந்த உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரித்தானியாவில் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெருக்களில் மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பரிக்க, பிரித்தானியப் பிரதமர் வீதிக்கு வந்து ஜெலஸ்கியை கட்டி அணைத்து, மரியாதையுடன் அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்று- பிரித்தானியாவும் பிரித்தானிய மக்களும் உக்ரேனுக்கு ஆதரவாக என்றைக்கும் நிற்பார்கள் என்று ஊடகங்களின் முன்பு உறுதிமொழி அளித்தார்.
அது மாத்திரமல்ல- 2.26 பில்லியன் பவுன்ஸ் நிதியையும் உடனடியாகவே உக்ரேனுக்கு வழங்க முன்வந்திருந்தது பிரித்தானியா.
மறுநாள் லண்டனில் நடைபெற்ற ஐரோப்பியப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு உக்ரேன் புறப்பட்ட ஜெலன்ஸ்கியிடம், விமான நிலையத்தில் வைத்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அந்தக் கேள்விக்கு ஜெலன்கி வழங்கிய பதில்- அடுத்து வருகின்ற பூகோள அரசியலைக் கோடிட்டுக்காட்டுவதாகக் கூறுகின்றார்கள் நோக்கர்கள்.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
