அமெரிக்கா பறக்கிறார் ஜெலென்ஸ்கி : ட்ரம்புடன் முக்கிய பேச்சு
Donald Trump
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
By Sumithiran
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை(18) வோஷிங்டனுக்குச் சென்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் "கொலை மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது" குறித்து கலந்துரையாட உள்ளதாக அவர் இன்று சனிக்கிழமை(16) அறிவித்தார்.
"அழைப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்."
ட்ரம்புடன் நீண்ட மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்
ஐரோப்பியத் தலைவர்களுடன் இணைவதற்கு முன்பு, "ட்ரம்புடன் நீண்ட மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்" ஒன்றை நடத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
புடினுடனான ட்ரம்ப்பின் பேச்சுவார்த்தை
அலாஸ்காவில் புடினுடனான ட்ரம்ப்பின் பேச்சுவார்த்தைகள் எந்த போர்நிறுத்த அறிவிப்பும் இல்லாமல் அல்லது மொஸ்கோவின் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வெளிப்படையான முன்னேற்றமும் இல்லாமல் முடிவடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு வோஷிங்டன் சந்திப்பு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்