அழிவுகளை காண உக்ரைனுக்கு வாருங்கள் : ட்ரம்பை அழைக்கிறார் ஜெலன்ஸ்கி
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன்(russia) எந்தவொரு ஒப்பந்தமும் ஏற்படுவதற்கு முன்பு,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை(donald trump) தனது நாட்டிற்கு வருகை தருமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(volodymyr zelenskyy) அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் சுமி நகரத்தைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணை 34 பேரைக் கொன்று 117 பேரைக் காயப்படுத்துவதற்கு முன்பு CBS இன் 60 நிமிட நிகழ்ச்சிக்கான ஒரு நேர்காணலில் அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
அழிவுகளை காண வாருங்கள்
"தயவுசெய்து, எந்த வகையான முடிவுகளுக்கும், எந்த வகையான பேச்சுவார்த்தைகளுக்கும் முன், மக்கள், பொதுமக்கள், வீரர்கள், மருத்துவமனைகள், தேவாலயங்கள், குழந்தைகள் அழிக்கப்பட்ட அல்லது இறந்தவர்களைக் காண வாருங்கள்" என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
அழைப்பை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வாரா..!
இருப்பினும், ஜெலென்ஸ்கியின் அழைப்பை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னும் தெரியவில்லை.
இதேவேளை ரஷ்யாவின் இந்த தாக்குதலை பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரிட்டன் தலைவர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
