அமெரிக்காவில் சிறுவன் துப்பாக்கிசூடு : இருவர் பலி பலர் படுகாயம்
United States of America
Gun Shooting
By Sumithiran
அமெரிக்காவில் (us)வோஷிங்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சியாட்டில் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இரவு 12 மணியளவில் (உள்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர்
இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனை கைதுசெய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி