கொழும்பில் பாதாள உலகக்கும்பலை சேர்ந்த மூவர் கைது

Raghav
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மேலும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது நேற்று செவ்வாய்க்கிழமை (25) மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவு
மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் தெமட்டகொடை (Dematagoda) பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை (Kalutara) காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் 44 வயதுடைய சந்தேக நபரொருவரும், மாத்தறை (Matara) காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் ரொட்டும்ப பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபரொருவரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
