உக்ரைன் வீரர்கள் நால்வர் ரஷ்யப் படையினரால் சுட்டுக்கொலை!
Ukraine
Russel Arnold
Russia
By Kathirpriya
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ரஷ்ய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் இராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
வடக்கு உக்ரைன் பகுதியை ஒட்டி உள்ள ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன் இராணுவ வீரர்கள் நுழைய முயற்சித்த போது அவர்கள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ரஷ்ய ஆளுனர் அலெக்சாண்டர் போகோமாஸ் தெரிவிக்கையில் , 'உக்ரைனிய நாசவேலை மற்றும் உளவுக்குழுவின் 6 பேர் பிரையன்ஸ்க்குள் நுழையும் முயற்சி முறியடிக்கப்பட்டது' என தெரிவித்தார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பில் காண்க.