தென்னிலங்கை துப்பாக்கிசூடு :ஆறு விசேட காவல்துறை குழுக்கள் களத்தில்
பெலியத்த பிரதேசத்தில் இன்று காலை அரசியல்வாதி ஒருவர் உட்பட ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 06 விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர்,
ஆறு விசேட காவல்துறை குழுக்கள் களத்தில்
"தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தற்போது 06 குழுக்களை நியமித்துள்ளார்.
அதன்படி தென் மாகாண குற்றப்பிரிவு, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, தங்காலை தலைமையக காவல்துறை பரிசோதகரின் கீழ் தனியான குழு, பெலியத்த காவல்துறை குழு, இன்னுமொரு அதிகாரிகள் குழு. மற்றுமொரு அதிகாரியின் உளவுத்துறை குழுக்களை கொண்ட அதிகாரிகள் என காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழப்பு
தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த பகுதியில் உள்ள வெளியேறும் பகுதியில் இன்று (22) காலை டிபென்டர் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |