சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கு கிடைத்த மில்லியன் கணக்கிலான வருமானம்
இலங்கைக்கு இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 635,784 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 1,025 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்தது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1 வருடத்தில் இந்த நாட்டிற்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
23 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்
இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை அந்த எண்ணிக்கை 23 இலட்சம் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த மாதத்தின் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 15,675 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
