கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 1,500 மேற்பட்ட கொள்கலன்கள்!
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின் போது, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
துறைமுகத்தில் தேங்கியுள்ள, அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் விடுவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் நிதியமைச்சின் தலையீட்டில் துறைமுகத்தில் தேங்கியிருந்த 500 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தன.
நாடளாவிய ரீதியில் கோதுமை மா, பால் மா, எரிவாயு மற்றும் சிமெந்து ஆகிய பொருட்களுக்கே தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 4 வகையான பொருட்களை தவிர, ஏனைய அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.