மாயமான அமெரிக்காவிற்கு செலுத்த வேண்டிய 626,755 டொலர்கள்: தீவிர விசாரணையில் CID
தபால் திணைக்களத்திற்கு சொந்தமான 626,755 அமெரிக்க டொலர்கள் வேறொரு தரப்பினரின் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் தொடர் விசாரணைகள் வெளிவிவகார அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு நீதிவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சேவைக்காக ஒதுக்கிய குறித்த நிதித்தொகை இலங்கை தபால் திணைக்களத்தின் மின்னஞ்சல் அமைப்பு மூலம் இரண்டு சந்தர்ப்பங்களில் ஒன்பது வெவ்வேறு கணக்குகளில் வைப்பீடு செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நேற்று அறிவிக்கபட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேலும் உலகளாவிய தபால் பரிவர்த்தனைகளுக்காக ‘யுனிவர்சல் போஸ்டல் யூனியன்’ வழங்கிய அதிகாரப்பூர்வ முகவரிக்கு அப்பாற்பட்ட ஒரு மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி இந்தப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வழக்கு தொடர்பான மின்னஞ்சல் தரவுகள், சேவையக அமைப்பு மற்றும் மடிக்கணினிகள் மேலதிக விசாரணைக்காக SLCERT-க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 20 மணி நேரம் முன்