சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான முக்கிய தகவல்
Mahinda Amaraweera
Sri Lanka
Ministry of Agriculture
By Shalini Balachandran
சேதமடைந்த பயிர்களுக்கான நட்ட ஈடாக ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், வறட்சி, வெள்ளம் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த பயிர்
அத்தோடு, சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டில் விவசாயிகளிடமிருந்து பங்களிப்பு எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றும் நெல், சோளம், மிளகாய், வெங்காயம், சோயாபீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய ஆறு வகையான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி