இலங்கையில் மோசமடையும் நிலைமை! உணவின்றி தவிக்கும் இலட்சக்கணக்கானோர்
Food Shortages
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Vanan
இலங்கையில் உணவு நெருக்கடி
இலங்கையில் பட்டினியால் வாடும் ஒரு இலட்சம் குடும்பங்கள் உள்ளதாக உணவு பாதுகாப்புக் குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
உணவு நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாக கூறியுள்ளார்.
சுமார் 75,000 குடும்பங்கள் நாளாந்தம் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு நிச்சயமற்ற நிலையில் இருக்கின்றனர்.
மோசமடையும் நிலைமை
40,000 பேர் வரை “சேலைன் ” மூலம் போஷாக்கை பெறுவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது நிலவிவரும் நெருக்கடிக்கு உரிய தீர்வுகளை உடனடியாக வழங்காவிட்டால் இந்நிலை மிகவும் மோசமானதாக அமையும் என தெரிவித்துள்ளார்.
