தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: விலையில் சடுதியான வீழ்ச்சி
தங்கத்தின் விலை
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் பதிவாகின்ற நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் தற்போது தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
அதன்படி, இன்றையதினம் (03) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 589,522 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 166,400 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 152,550ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கச் சந்தை எழுச்சி
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் மீது ரஷ்யா போர் போன்றவற்றால் முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.

புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய தங்க நிலவரத்தின் முழு விபரம்

தங்கம் அவுன்ஸ் விலை - ரூபாய் 589,522.00
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 20,800.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை - ரூபாய் 166,400.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 19,070.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை - ரூபாய் 152,550.00
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை - ரூபாய் 18,200.00
21 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை - ரூபாய் 145,600.00
செட்டியார் தெரு விலை விபரம்
செட்டியார்தெரு நிலவரத்தின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 153,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,500 ரூபாவாக காணப்படுகிறது.