தெற்காசியாவிலேயே முதல் சேவை..! இலங்கைக்கு வந்தது முதலாவது பயணிகள் ட்ரோன்
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் நாட்டை வந்தடைந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்தப் பயணிகள் போக்குவரத்து ட்ரோனின் முதலாவது சோதனைப் பறப்பை இம்மாத இறுதியில் கொழும்பு துறைமுக நகரில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கான முதல் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAASL) பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணி
இந்த ட்ரோன் மூலம் ஒரே தடவையில் இரண்டு பயணிகள் பயணிக்க முடியும் என்பதுடன், தொடர்ந்து 30 நிமிடங்கள் பறக்கும் திறனும் இதற்கு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரோன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விமானங்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக EHang நிறுவனம் முன்னெடுத்துள்ள “Global Fast Track Program” திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்த விசேட வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, இந்தப் பயணிகள் ட்ரோன்களின் பிரதான செயற்பாட்டு மையமாக கொழும்பு துறைமுக நகரம் பெயரிடப்பட்டுள்ளது.
அத்துடன், சிகிரியா, பிடுரங்கல மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த ட்ரோன்கள் மூலம் வான்வழிப் பயண சேவைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டு வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |